அன்பார்ந்த வெளிநாடு வாழ் என் இரத்த சொந்தங்களே!
கடந்த சில தினங்களாக www.koothanallurpoliticalrefor mists.blogspot.comஎன்ற இணைய தளம் மூலம் நாம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் பலனாக, நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலிலே 24 வார்டுகளிலும் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முன்வந்துள்ளார்கள். மக்களிடையே மாபெரும் விழிப்புணர்வு தோன்றி இருப்பதற்கான அடையாளமே இது.
நமதூர் நகராட்சியின் நகரமன்ற தலைவர் பதவி Scheduled Caste (SC) கோட்டாவாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமாக SC வாக்காளர்கள் BC சிறுபான்மையர்களை விட 300 பேர் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தால் அது உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. ஆதிக்க சக்திகளின் அதிகார துஷ்பிரயோகம் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப் பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இந்த முடிவை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிகிறோம். இருப்பினும் உள்ளாட்சி தேர்தலுக்கான எல்லா வேலைகளும் தங்கு தடையின்றி நடந்தேறியே வருகிறது.
கடந்த சில தினங்களாக www.koothanallurpoliticalrefor
நமதூர் நகராட்சியின் நகரமன்ற தலைவர் பதவி Scheduled Caste (SC) கோட்டாவாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமாக SC வாக்காளர்கள் BC சிறுபான்மையர்களை விட 300 பேர் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தால் அது உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. ஆதிக்க சக்திகளின் அதிகார துஷ்பிரயோகம் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப் பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இந்த முடிவை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிகிறோம். இருப்பினும் உள்ளாட்சி தேர்தலுக்கான எல்லா வேலைகளும் தங்கு தடையின்றி நடந்தேறியே வருகிறது.
ஜனாப் அன்சாருதீன் பாபு அவர்களுக்கு... தங்களின் சமூக அக்கறைக்கு ஏற்கனவே நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன்... ஆனால் உங்களுடைய தொடர் பரிமாணங்களை காணும் போது ஏதோ சுயேச்சைகள் மட்டும் தான் சரியானவர்களை போன்ற மாயையை ஏற்படுத்த முயல்வது சரியல்ல... மற்றும் பெரும்பான்மையானவர்கள் எந்த சமூகத்தை சார்ந்தவர்களோ அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதாக கூறுவதும் ஏற்புடையதல்ல... தோழமையுடன்... கவிஞர் வி. ஏ. முகம்மது ரிலுவான் கான், BCA, MBA, [BGL]
ReplyDeleteஅன்புள்ள ரிலுவான் கான் தாங்களுக்கு,
ReplyDelete"தேர்தல் என்றாலே அது அரசியல்வாதிகளுக்கு தான் சொந்தம்" என்பது போலவும், "பொது மக்களாகிய நாம் எல்லாம் எதாவது ஒரு அரசியல் இயக்க வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று நிலவும் மாயையை தகர்க்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமே தவிர "சுயேட்சைகள்" மட்டுமே தகுதியானவர்கள் என்று எந்த ஒரு புதிய மாயையையும் உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. உங்களை போன்ற படித்த, சமூக அக்கறை பின்னணி கொண்டவர்களிடமே இன்னும் எங்களது முயற்சியின் உண்மை நோக்கம் வந்து சேரவில்லையே! என்று எண்ணும் போது அது எங்களின் தோல்வியையே காட்டுகிறது.
ஒரு வேளை சாம்பார் வைப்பதற்கு வாங்கும் கால் கிலோ கத்தரிக்காயையே, "சொத்தை இருக்கிறதா? அழுகி இருக்கிறதா? முத்தலாக இருக்கிறதா?" என்று குறைந்தது பத்து முறையாவது பார்த்து பார்த்து வாங்கும் நம் மக்களால், தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் போது அப்படி ஒரு தரம் பார்த்து தேர்ந்து எடுக்கும் குணம் கொள்வதில்லையே... அது ஏன்??? என்ற ஆதங்கம் கூட எங்களின் இந்த முயற்சிகளுக்கு ஒரு காரணம். "அப்படி ஒரு முயற்சியை நம் மக்கள் எடுத்து விடக்கூடாது" என்று அரசியல் வாதிகள் நம் மக்களை பழக்கப்படுத்தி விட்டார்களோ??? என்ற சந்தேகமும் எங்களின் இந்த முயற்சிகளுக்கு மேலும் ஒரு காரணம்.
அரசியல் அமைப்புகளுக்கோ, நேர்மையான அரசியல் வாதிகளுக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. அதே போன்று தகுதி இல்லாத "சுயேட்சைகளுக்கும்" நாங்கள் ஆதரவாளர்கள் அல்ல. எங்களின் நோக்கம், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மக்கள் சுய சிந்தனையோடு, தகுதி வாய்ந்தவர்களையே தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எங்கள் அவா!
அதே போன்று பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் தான் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், அப்படி வழங்கப்பட்ட அங்கீகாரத்தையும் அதிகார துஷ்பிரயோகமாக பிடுங்க கூடாது என்று தான் கருத்துரைக்கிறோம். இதற்கு உதாரணம் நம் ஊரின் நகராட்சி மன்ற தலைவர் பதவி BC இடமிருந்து SC கோட்டாவாக மாற்றப்பட்டிருப்பதே!
Mohamed Riluwaan Khan:
ReplyDeleteஉங்களது பொறுப்பு மிக்க பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே... உங்களுடைய உண்மை நோக்கங்கள் பற்றியும் கூறினீர்கள் நன்றி! மேலும் நமது கூத்தாநல்லூரில் அனைத்து சுயேச்சை மற்றும் அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் திங்கள் கிழமை தெரியவரும். அனேகமாக தாங்களும் வேட்பாளராகக்கூடும், ஒவ்வொரு வேட்ப்பாளரும் தங்களை பொதுமக்களாகிய நாங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? தாங்களின் தகுதிகள் என்ன? என தெளிவான காரணங்களோடு மக்களை அணுகினால் நல்லது. நமதூரில் அறிவு சார்ந்தவர்களும், நேர்மையானவர்களும், லஞ்ச லாவண்யங்களுக்கும், குற்ற வழக்குகளுக்கும் அப்பாற்பட்டவராய் இருப்பவரும், சுய தேவைகளுக்கும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் பதவியை பயன்படுத்தாதவராய் இருப்பவரை தேர்ந்தெடுக்கும் தெளிவு நமதூர் மக்களுக்கும் அவசியம். பார்ப்போம் நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்!
by MOHAMED RILUWAAN KHAN