Date: 14.05.2012
ஜாதி வாரி கணக்கெடுப்பு...!
சமூக, பொருளாதார,
ஜாதி வாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெறத் துவங்கியதில் இருந்தே பல்வேறு சமூக ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி சங்கங்கள் தங்களின் சமூக ஜாதி மக்களை "என்ன விபரம் சொல்லி எப்படி பதிய வைக்க வேண்டும்" என அறிவுறுத்தி பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாகவும், பல்வேறு தொலை தொடர்புத் துறை வாயிலாகவும் தயார் படுத்தி வருவதை நாம் அறிவோம்!
இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு இவ்வளவு முக்கியத்துவம் பெறக் காரணம் இந்திய அரசாங்கத்தின் "இட ஒதுக்கீடு" கொள்கை ஜாதி வாரி அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதேயாகும். இந்தியா போன்ற பறந்து விரிந்த, பல கோடி மக்கள் தொகை கொண்ட, பல்வேறு சமூக, பொருளாதார, ஜாதி வாரி, மொழி வாரி மக்கள் கொண்ட நாட்டில், அம்மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்ய "இட ஒதுக்கீடு" என்ற கொள்கை அத்தியாவசியம் தான். அனால் இந்த இட ஒதுக்கீடு ஜாதி வாரி அடிப்படையில் அமல் படுத்தப் படுவது ஏன்???
பொதுவாகவே
நம் மக்களிடையே ஜாதி உணர்வு என்பது மிக மிக அதிகம். தன்னுடைய ஜாதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக தன் உயிர் கொடுத்தும், பிறர் உயிர் குடித்தும் "ஜாதி எங்கள் உயிருக்கு மேல்!" என்று நிரூபித்த பல்வேறு ஜாதிக் கலவரங்கள் இந்திய நாட்டின் வரலாற்று வடுக்களாக இன்றளவும் மாறாமல் இருக்கிறது. இதே மிகுந்த ஜாதி உணர்வு மிக்க மக்கள் தான், அரசாங்க நலத் திட்டங்களை அனுபவிப்பதற்காக, தங்கள் ஜாதியை குறைத்து மதிப்பிட்டு "பிற்படுத்தப் பட்டோர்", "மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்", "தாழ்த்தப்
பட்டோர்" என்று சான்று வழங்கக் கோரி தாசில்தாரிடம் லஞ்சம் கொடுத்து கெஞ்சிக் கொண்டு வரிசையில் காத்திருக்கின்றனர். மக்கள் மன நிலையில் இந்த முரண்பாடு ஏன்??? இந்த முரண்பாட்டிற்கு மக்களை தயார் படுத்தும் விதமாகத் தானே இன்றைய ஜாதி வாரி அமைப்புக்கள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன. "என் ஜாதி உயர்ந்த ஜாதி" என்று பதிவு செய்ய யாருமே தயாராக இல்லையே...ஏன்???
ஜாதி வாரி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் உயர் ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு அரசாங்க நலத்திட்டங்கள் சென்றடைவதில்லை. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் உள்ள பணக்காரர்கள், பொருளாதார தன்னிறைவு பெற்றிருந்தும், தங்கள் ஜாதியை சொல்லி பலன் அனுபவிக்கிறார்கள்.
"உயர் ஜாதி" என உயர்த்தப்பட்ட வகுப்பில் ஏழைகளே இல்லையா??? "தாழ்ந்த ஜாதி" என தாழ்த்தப்பட்ட வகுப்பில் பணக்காரர்களே இல்லையா??? மேடு பள்ளமாய் இருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க மக்களின் வாழ்வாதாரத்தை சமன் செய்யும் "ஏர் கலப்பை" யாகத்தான் இட ஒதுக்கீடு கொள்கை இருக்க வேண்டுமே தவிர, இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் ஜாதி பிரிவினைகளை
தூண்டக்கூடிய நிலையில்
அரசாங்கக் கொள்கைகள் இருப்பது ஏன்??? இது இந்தியர்களின் துரதிஷ்டமா???
"ஜாதி இரண்டொழிய
வேறில்லை" என்றான்
புரட்சிக்கவி பாரதி.
ஜாதி ஏற்றத்
தாழ்வுகளை போக்க
வேண்டுமென போராடினார்
தந்தை பெரியார்.
ஆனால் ஜாதிப்பிரிவுகளை
இன்றும் ஊக்குவித்துக்கொண்டு
தான் இருக்கின்றோம்.
"பணக்கார
ஜாதி", "நடுத்தர
ஜாதி", "ஏழை
ஜாதி" என்ற
மூன்றே பிரிவுகள்
எங்களுக்கு போதும்...!
என்று முழக்கமிட
நம்மில் யாரும்
தயாராக இல்லையே...ஏன்???
இந்த முழக்கத்தை
முன்னிறுத்தி போராட
இன்றைய தலைவர்கள்
யாரும் முன்
வரவில்லையே...ஏன்???
அரசாங்க நலத்திட்டங்களும்,
இட ஒதுக்கீடு
கொள்கையும் "ஜாதி
வாரி" அடிப்படையில்
இல்லாமல் "பொருளாதார"
அடிப்படையில் தான்
இருக்க வேண்டும்
என்ற சீர்திருத்தக்கொள்கையை
வலியுறுத்த எந்த
அமைப்புக்களும் களம்
இறங்கவில்லையே...ஏன்???
ஜாதிய
அரசியல் சூழல்
நிலவும் இந்நாட்டில்
ஜாதி வாரி
ஓட்டுக்களை இழந்து
விடுவோம் என்ற
அச்சம் தான்
காரணமா?
1931-ம் ஆண்டிற்குப்பிறகு சுதந்திர இந்தியாவில், இது போன்ற ஜாதி வாரி கணக்கெடுப்பு இப்போது தான் நடத்தப் படுகிறது. அன்றைய ஆங்கிலேய அரசின் பிரதானக் கொள்கையே இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி தானே! அன்று ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இது போன்ற ஜாதி வாரி கணக்கெடுப்புக்களை புறந்தள்ளி, "பொருளாதார அடிப்படையின் கீழ் இட ஒதுக்கீடு" என்ற புதுக்கொள்கை வகுத்து, ஜாதி வாரி பிரிவுச் சூழ்ச்சிகளை போக்கி, மக்களிடையே நிலவும் ஜாதிப் பிரிவினைகளை நீக்கி, மகிழ்ச்சியான மக்கள் வாழும் எதிர்கால இந்தியாவை இன்றே நாம் உருவாக்க "ஏன்" அடித்தளம் அமைக்கக் கூடாது???
கடை நிலை இந்தியனாக, கடைசித் தமிழனாக, பாமரனின் பிரதிநிதியாக எனக்குள் ஏற்பட்ட சில ஏக்கங்களை "ஏன்? ஏன்?? ஏன்???" என்று வரிசைப் படுத்தி இருக்கிறேன். என்னுடைய ஏக்கங்கள் தவறானதாகவும் இருக்கலாம், நடை முறைச் சாத்தியக்கூறுகள் இல்லாதவைகளாகவும் இருக்கலாம். என்ன செய்வது...பாமரனுக்கு உள்ள புத்தி அவ்வளவு தானே!
இப்படிக்கு,
பாமரனின்
பிரதிநிதியாக உங்கள் சகோதரன்,
Ansardeen Babu.
Ansardeen Babu.